மாபெரும் டொலர் பரிமாற்ற மோசடி! 17 நிறுவனங்கள் மீது FCID விசாரணை

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka
By Dharu Oct 04, 2026 12:49 AM GMT
Report

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு மாற்றியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணையை இலங்கை காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) ஆரம்பித்துள்ளது.

இந்த 17 நிறுவனங்களும் ஒன்று அல்லது இரண்டு நபர்களால் இயக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகள், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி பல நிறுவனங்கள் பெருமளவு பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் FCID-யிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டன.

2 ட்ரில்லியனை கடந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்!

2 ட்ரில்லியனை கடந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்!

சட்டவிரோத நடவடிக்கை

விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதேபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 72 நிறுவனங்களை இயக்கிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாபெரும் டொலர் பரிமாற்ற மோசடி! 17 நிறுவனங்கள் மீது FCID விசாரணை | Massive Dollar Exchange Fraud

இதன் தொடர்ச்சியாக, அதே முறையில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என FCID தெரிவித்துள்ளது.

2023 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2025 செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 72 நிறுவனங்களும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 17 நிறுவனங்களும் இணைந்து மொத்தமாக ரூ.190 பில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதில், ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 72 நிறுவனங்கள் மாத்திரம் ரூ.130 பில்லியனை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணப்பரிமாற்றங்கள் கொழும்பில் அமைந்துள்ள ஆறு தனியார் மற்றும் அரச வங்கிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை

மின்சாரக் கட்டண குறைப்பு! எரிசக்தி அமைச்சின் விசேட நடவடிக்கை

மாற்றப்பட்ட பெரும்பாலான பணம்

விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பணச்சலவை தொடர்பில் அதிக ஆபத்துள்ள நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சில நாடுகளுக்கு பெருமளவு பணத்தை மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில், பனாமா, மொரீஷியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் பணச்சலவை தொடர்பில் அதிக ஆபத்துள்ள பிராந்தியங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்தப் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்ற பின்னர், குறித்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு எந்தவொரு பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால், வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட பெரும்பாலான பணம் சட்டவிரோதமான வழிகளில் ஈட்டப்பட்டிருக்கலாம் என FCID சந்தேகிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026