நுவரெலியா நகர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல்...!
Nuwara Eliya
By Kathirpriya
நுவரெலியா நகரப் பகுதியிலுள்ள பிரதான விடுதி ஒன்றின் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (31) ஏற்பட்ட தீயினால் சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விடுதியின் சமயலறையில் ஏற்பட்ட வாயுக் கசிவே இந்த விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தின் காரணமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்