கேரளாவில் பாரிய நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு (புதிய இணைப்பு)
கேரளாவில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இந்தியாவின்(india) கேரள (kerala) மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலம் மேப்பாடி என்ற பகுதியில் இன்று (30) இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும், நிவாரணக் குழுக்களும் அங்கு சிக்கியுள்ள மக்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணிகள் தாமதம்
கனமழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிலர் சாலியாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the landslides in parts of Wayanad. The injured would be given Rs. 50,000. https://t.co/1RSsknTtvo
— PMO India (@PMOIndia) July 30, 2024
பல அரசியல் தலைவர்கள் இரங்கல்
குடியரசு தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.