புகையிரத திணைக்களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளால் புகையிரத திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara ) தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 67 நாட்களாக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வழமையாக ஒரு நாளில் புகையிரத திணைக்களத்திற்கு 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கான வருமானம் 500 மில்லியனைத் தாண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக கடந்த 67 தினங்களாக தற்காலிகமாக புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் புகையிரத திணைக்களத்திற்கு இதனால் பெருமளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் முதல் மாகாண மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்களுக்கு செல்வோர் கடந்த ஓகஸ்ட் மாதம் வழங்கப்பட்டுள்ள பிரவேச பத்திரத்தை உபயோகித்து புகையிரதங்களில் பயணம் செய்ய முடியும்.
அதற்கிணங்க 130 புகையிரத சேவைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தம்மிக்க ஜயசுந்தர(Dhammika Jayasundara) கூறியுள்ளார்...