நெடுங்கேணியில் வெடிக்கும் பெரும் போராட்டம்! பறிபோகும் அபாயத்தில் தமிழர் நிலங்கள்
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(02) திங்கட்கிழமை வவுனியா - நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
,இதன்போது, இன்று முற்பகல் 10 மணிக்கு நெடுங்கேணி பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை நகர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆதரவு
போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வன்னி மாவட்ட பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குடியேற்றங்கள்
இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீரை இலகுவாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் - மகாவலி எல் வலயத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக நிலப் பகுதிகள் பெருமளவில் பறிபோகும் என்பதுடன் குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலும் திட்டமிட்டமுறையில் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
H8TK5N
2011ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் எதிர்ப்புகள் மற்றும் நிதிப் பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை 2 ஆயிரத்து 350 கோடி ரூபாவில் செயற்படுத்தத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்