மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி
Sri Lanka Police
Matale
Accident
By Aadhithya
மாத்தளை - நாவுல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எலஹெர - மொரகஹகந்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவுல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதிகள் இருவர் மற்றும் பின்னால் சென்ற ஒருவரும் காயமடைந்து கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காயங்கள்
விபத்தில், பின்னால் அமர்ந்து சென்ற பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கொன்கஹவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
அதன்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி