மாத்தறையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் கைது
மாத்தறையில் (Matara) மோட்டார் வாகனம் ஒன்றின் மீது காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் உத்தரவை மீறி பயணித்தமையினால் குறித்த வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது.
வீதித் தடை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீதித் தடையில் இருந்த காவல்துறையினர், மோட்டார் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
இருப்பினும், உத்தரவை மீறி குறித்த மோட்டார் வாகனம் பயணித்துள்ளது.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகனம்
இவ்வாறு, நிற்காமல் சென்ற மோட்டார் வாகனம், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
