கொழும்பு செல்ல முடியாததால் மாத்தறையில் இரவு நேரம் களமிறங்கிய மக்கள்(படங்கள்)
people
matara
protest
By Sumithiran
கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் இன்று இரவு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாத்தறை இஸதீனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி சரத் விமலசூரிய மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக தனியாக வந்து பதாதையை மாட்டிக்கொண்டு போராட்டத்தை ஆரம்பித்தார்.
பின்னர் போராட்டக்காரர்கள் இரவிலும் சம்பவ இடத்திலேயே நின்று அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு செல்ல சிரமப்படும் மக்கள் சார்பில் மாத்தறையில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி