மாதகலில் 110 கிலோ கஞ்சாவுடன் கடற்படையினரிடம் சிக்கிய நபர்!
india
sri lanka
jaffna
people
By Shalini
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா கடத்தி வந்த நபர் மாதகல் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
மாதகல் கடற்பரப்பில் கஞ்சா கடத்தி வருவது தொடர்பில் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் இன்று காலை விசேட அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நான்கு மூடைகளில் 110 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகும் கைபெற்றப்பட்டுள்ளது.
ஒரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் மாதகல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இளவாலை பொலிசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்