ஜெனிவா விவகாரம்! வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அவசர கலந்துரையாடல்
தமிழ்த் தேசியப் பரப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய தமிழ் கட்சிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களைச் பிரதிநிதித்துவப்படத்தும் கிறிஸ்தவ ஆயர்கள், ஆதீன முதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியன இணைந்து இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றிணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கலந்துரையாடலானது வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த கலந்தரையாடலின் போது ஜெனிவா அமர்வு தொடர்பாகவும், தமிழ்த் தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் போது தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கருணாகரம் மற்றும் சிறிதரன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன்சுவாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மன்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ்.மறைவாட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார் மற்றும் திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கூட்டம் ஆரம்பமாகிய நிமிடம் வரை தமிழ் தேசியமக்கள் முண்ணனி சேர்ந்தவர்கள், அனந்தி சசிதரன், ஸ்ரீகாந்தா, சி.வி.விக்கினேஸ்வரன் தலமையிலான கட்சிகளை சேர்ந்த எவரும் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.