மாவை சேனாதிராஜாவின் மறைவு பேரிழப்பாகும் : இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல்

Mavai Senathirajah ITAK Ramalingam Chandrasekar
By Raghav Jan 30, 2025 08:15 AM GMT
Report

அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அவர்களின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என  கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் மன வேதனையை தருகின்றது.

மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள ஜனாதிபதி அநுர : வெளியான தகவல்

மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள ஜனாதிபதி அநுர : வெளியான தகவல்

தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு

அவரின் மறைவானது தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, ஜே.வி.பியின் ஸ்தாபகர் தோழர் ரோஹண விஜேவீரவின் போராட்டங்களைக்கூட நேர்கொண்ட பார்வையுடன் அவதானித்தனர்.

மாவை சேனாதிராஜாவின் மறைவு பேரிழப்பாகும் : இராமலிங்கம் சந்திரசேகர் இரங்கல் | Mavai Senathirajahpassed Away Chandrasekartributer

ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.பி.யின் அணுகுமுறை தொடர்பில் ஆதரவு போக்கை கடைபிடித்தவர்.

5 தசாப்தகால அரசியல் பயணத்தின்போது, மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்ட அரசியல்வாதியாவார். மாவை அண்ணன் மறைந்தாலும், மக்களுக்காக அவர் எதிர்பார்த்தவற்றை நிச்சயம் நாம் செய்வோம்.

மாவை சேனாதிராஜா அவர்களின் பிரிவால் துயர் உற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவையின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி!

மாவையின் புகழுடலுக்கு இந்திய துணைத் தூதுவர் அஞ்சலி!

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021