சூழ்ச்சி கூட்டத்தால் வீழ்த்தப்பட்டார் மாவை :சிவமோகன் பகிரங்கம்
தமிழ் மக்கள் தொடர்பில் பலமான எண்ணங்களுடன் இருந்த மாவை.சேனாதிராஜா இறுதி நேரரங்களில் ஒரு சூழ்ச்சி கூட்டத்தால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
மாவை சேனாதிராஜா மரணிக்கும் தினமன்று அவரது வீட்டிற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் மற்றும் பதில் தலைவர் சத்தியலிங்கம் இருவரும் சென்று சந்தித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அவரை சந்தித்தவேளை அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அங்கிருக்கவில்லை.இவர்கள் இருவரும் அவருடன் என்ன கதைத்தார்கள் எப்படியான மன அழுத்தத்தை அவருக்கு கொடுத்தார்கள் என்பதுவும் எவருக்கும் தெரியாது. இன்று அதனை சொல்வதற்கு மாவை சேனாதிராஜா ஐயாவும் இல்லை.
எனவே தாம் என்ன கதைத்தோம் என்பதை இவர்கள் இருவருமே வெளிப்படுத்த வேண்டும்.அதுவரை நல்ல நிலையில் இருந்த அவர் பின்னரேயே விழுந்து நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிவமோகன். இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |