சிங்கள இளையோர்களிடம் சிறீதரன் எம்.பி விடுத்த கோரிக்கை

Sri Lankan Tamils Parliament of Sri Lanka S Shritharan
By Vanan Nov 25, 2023 12:35 AM GMT
Report

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை, இராணுவத் தலையீடுகளோ, காவல்துறையினரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு வழிவகை செய்வதன்மூலம் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்வாருங்கள் என்று சிங்கள இளையோரை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேறடறையதினம் (24) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அவர், தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நெருங்கியிருக்கும் இந்தக் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டிருக்கும் இராணுவக் கெடுபிடிகள் குறித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!

அச்சுறுத்தல்களும், விசாரணைகளும்

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டதற்கமைய, ஈழத்தமிழர்கள், இனவிடுதலைக்காக உயிர்துறந்த தமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட விளைநிலங்களான துயிலும் இல்லங்களுக்குச் சென்று நினைவேந்தும் உரிமையை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தார்கள்.


ஆனால், தமது உறவுகளை இழந்து துயருறுகின்ற நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை உணரத்தலைப்படாத அதிகாரக் கரங்கள், அடிப்படை மனிதாபிமான உணர்வுகளைக்கூடப் புறந்தள்ளி இன்னுமின்னும் எங்கள் மக்களை வஞ்சிக்கும் செயற்பாட்டையே மிகக் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.

இனி ஒருபோதும் போரொன்றை விரும்பாத எமது மக்கள், பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் தங்களின் பிள்ளைகளை, அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் சென்று வழிபடுவதற்கும், விளக்கேற்றுவதற்கும், கண்ணீர்விட்டு அழுவதற்குமான சந்தர்ப்பங்களைத் தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களும், விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுகின்றன.  

லண்டனில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்ட தமிழீழ தேசியக் கொடி! மாவீரர்களுக்கு அஞ்சலி(படங்கள்)

லண்டனில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்ட தமிழீழ தேசியக் கொடி! மாவீரர்களுக்கு அஞ்சலி(படங்கள்)

போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் நிரம்பிய பின்னரும், வடக்கு, கிழக்கிலுள்ள 27 மாவீரர் துயிலும் இல்லங்களில், யாழ்ப்பாண மாவட்டத்தின் கொடிகாமம், எள்ளங்குளம், கோப்பாய் ஆகிய துயிலும் இல்லங்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லம், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, ஆலங்குளம், அளம்பில், நெடுங்கேணி களிக்காடு, மற்றும் மணலாறிலுள்ள உதயபீடம், கோடாலிக்கல் புனிதபூமி ஆகிய துயிலும் இல்லங்கள், வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லம், மட்டக்களப்பு தாண்டியடி துயிலும் இல்லம் ஆகிய பன்னிரண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்றுவரை இராணுவப் படை முகாம்களாக முற்றுகையிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தை விடுவிக்கக் கோரி கடந்த 2023.11.11 ஆம் திகதி பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 துயிலும் இல்ல பூசிப்பு

இவ்வாறானதொரு சூழலில், தமது பிள்ளைகளின் கல்லறைகள் அத்தனையும் போரியல் மாண்புக்குப் புறம்பான வகையில் இடித்தும், பெயர்த்தும் அழிக்கப்பட்ட பின்னரும், அந்தக் கல்லறைகள் நிறைந்திருந்த துயிலும் இல்லங்களைத் தமது புனிதபூமியாக எண்ணியே தமிழர்கள் இன்றளவும் பூசிக்கிறார்கள்.

சிங்கள இளையோர்களிடம் சிறீதரன் எம்.பி விடுத்த கோரிக்கை | Maveerar Day Right To Remember Sritharan Speech

திரும்பும் திசையெல்லாம் ஆக்கிரமிப்பின் கால்கள் ஆழ வேரூன்றிப் போயிருக்கும் தமிழர் தாயகத்தில், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் மீதான ஆக்கிரமிப்பும், வழிபாட்டுரிமை மீதான தடையும் மீளவும் வலிந்து ஏற்படுத்தப்படக் கூடும் என்ற அடிப்படையில், மக்களிடையே ஆழப்பதிந்திருக்கும் அரசு மீதான நம்பிக்கையீனமும், துயிலும் இல்லத்தின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் அவர்களுக்கிருக்கும் ஆத்ம எதிர்பார்ப்பும், அத்துயிலும் இல்ல வளாகங்களை எல்லைப்படுத்துவதிலும் அலங்கரிப்பதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்தகைய மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய, காலத்தின் தேவை கருதியும் துயிலும் இல்ல மரபுகளுக்கமையவும் கனகபுரம், முழங்காவில், வன்னிவிளாங்குளம் ஆகிய மூன்று துயிலும் இல்லங்களினதும் நுழைவாயில் முகப்புகளை, அரை நிரந்தரமானவையாக நிறுவியிருக்கிறோம்.

எமக்கெதிராக அரசு பூசமுற்படுகின்ற பயங்கரவாத முலாம் குறித்த எந்தக் குறியீடுகளும் அவற்றில் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஆனால் போரை நினைவுபடுத்துகின்ற, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற எந்தவொரு அடையாளங்களும் இல்லாத வெற்று முகப்புகளை நிறுவியமைக்காக, இதுவரை நான் உட்பட பதின்மூன்று பேர் காவல்துறையினரால் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம்.

தமிழர்களின் பூர்வீக மண்ணை ஆக்கிரமித்து, நூறு வீதம் தமிழ் மக்களின் புழக்கம் செறிவாக உள்ள தமிழர் தாயகப் பகுதிகளின் பெருநகரங்களிலும், பிரதான வீதிகளிலும் ஏராளமான போர் வெற்றிச் சின்னங்கள் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி

மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி

போர் வெற்றிச் சின்னங்கள்

குறிப்பாக கிளிநொச்சி நகர மத்தியில், டிப்போச்சந்திக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் அருகேயுள்ள சந்திரன் பூங்கா வளாகத்தில், தமிழர்களின் இதயங்களைத் துளைத்து உள்நுழைவதான தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும், துப்பாக்கிச் சன்னம் ஒன்றுடனான போர் வெற்றிச் சின்னமும், ஆனையிறவுப் பகுதியில் A.9 பிரதான வீதியின் இருமருங்கும், இருவேறு போர் வெற்றிச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சிங்கள இளையோர்களிடம் சிறீதரன் எம்.பி விடுத்த கோரிக்கை | Maveerar Day Right To Remember Sritharan Speech

இலங்கையைத் தாங்கி நிற்கும் வலிந்த கரங்கள் ஒருபுறமும், இராணுவச் சிப்பாய் ஒருவரின் இராணுவச் சீருடையுடனான உருவச்சிலை ஒருபுறமும் நிறுவப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் A.35 பிரதான வீதியின் ஒருமருங்கில், ஆயுதம் தரித்த இராணுவச் சீருடை, சிங்கக்கொடி, துப்பாக்கி என்பவற்றை ஏந்தியவாறு வெற்றிக்களிப்பில் மிதக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவரது உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. 

அடிப்படை உரித்துக்கோரிப் போராடிய ஒரு இனத்தைத் தோற்கடித்துவிட்டோம் என்கிற மமதையையும், போரின் குரூரத்தையும், படையினரது ஆக்கிரமிப்புச் சிந்தையையும் முகத்திலறைந்தாற்போல் பிரதிபலிக்கும் ஆயுத கலாசார நினைவுச்சின்னங்கள் சீர்குலைக்காத இன நல்லிணக்கத்தை, அவை நினைவுபடத்தாத போரியல் உணர்வுகளை, நினைவேந்தல் உரித்தை நிலைநாட்டுவதற்காக அமைத்த துயிலும் இல்ல முகப்புகள் சீர்குலைக்கும் என்று சிந்திப்பதுகூட ஆக்கிரமிப்பின் அதியுச்ச வெளிப்பாடாகவே தென்படுகிறது – என்றார்.

இதன்போது தேராவில் துயிலும் இல்ல விடுவிப்புத் தொடர்பான ஆர்ப்பாட்டத்தின்போது கையளிக்கப்பட்ட மகஜரின் பிரதியும், புதிதாக நிறுவப்பட்டுள்ள துயிலும் இல்ல முகப்பின் நிழற்படமும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள இராணுவ நினைவுச் சின்னங்களின் புகைப்படங்களும் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு நாடாளுமன்றிலும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024