யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவருடன் ரணில் திடீர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் (Mawai Senadhiraja) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்றிரவு (07) யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.
சிறந்த அனுபவம்
இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |