2009 விடுதலை போரில் தன்னுயிர் ஈந்த மக்கள்...! வலிசுமந்து பிதிர்கடன் நிறைவேற்றும் உறவுகள்
வடக்கு - கிழக்கு பகுதிகளில் 2009 ஆம் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் (Mullivaikal) 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், இறுதிப்போரில் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் - முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் தற்போது நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இன்றையதினம் (18.5.2024) காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் - கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே நேர்த்தியான முறையில் நடைபெறுகின்றது.
பெரும்திரளான மக்கள்
குறித்த வழிபாட்டில் கட்சி பேதமின்றியும், சாதி, மத பேதமில்லாமல் உறவுகளை இழந்த பெரும்திரளான மக்கள் வருகைதந்து இறந்தவர்களின் பெயர் கூறி பிதிர் கடனை நிறைவேற்றியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |