அநுர ஆட்சியில் மே18 முள்ளிவாய்க்காலில் நடந்த இரகசிய நடவடிக்கை
கடந்த மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் இராணுவ புலனாய்வாளர்களினால் இரகசிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 18 ஆம் திகதி உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் வகையில் இது இடம்பெற்றிருந்தது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது, அந்த பகுதியில் இணைய வசதிகள் தடை செய்யப்பட்டதா என்கின்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது ஜார்மர் தாக்குதல் (Network Jammer) நடைபெற்றதை பலர் உணர்ந்துள்ளதுடன் அதனை யாரும் வெளிப்படுத்தவில்லை.
ஜார்மர் என்பது, தொலைபேசி சாதனங்கள் மற்றும் அவற்றின் நெட்வேர்க் கோபுரங்களுக்கு இடையேயான தொடர்பை தடுப்பதன் மூலம் செல்லுனர் சிக்னல்களை சீர்குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனமாகும்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று, ,இந்த ஜார்மர் பயன்படுத்தப்பட்டதா?, அநுரவின் ஆட்சியில் நடந்த இரகசிய நடவடிக்கை குறித்து ஆராய்கிறது ஐபிசி தமிழின் “செய்திகளுக்கு அப்பால்”நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
