தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடூர சம்பவம்
மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் நேற்று(16) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.
மாதவன மயிலத்தமடு பகுதியில் அத்துமறிய சிங்கள குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது கால்நடைகளை சுட்டுக் கொண்டுள்ள கோரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இலங்கை அதிபருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பு மாதவன மயிலத்தமடு பகுதியில் அராஜகம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமை ஆணைக்குழு
இரு சாராருக்கும் சுகமான ஒரு சூழலை ஏற்படுத்தி முரண்பாடுகளை தவிர்க்க அதிபர் பணிபுரை வழங்கியிருந்தாலும் அவருடைய பணிபுரைகள் அனைத்துமே காற்றில் பறக்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது.
அத்து மீறிய பேரினவாத குடியேற்றவாசிகளின் அராஜக தனம் வாய்பேச முடியாத மிருகமான கால்நடைகளில் இன்று அரங்கேறியுள்ளது. குறித்த குடியேற்றவாசிகளின் செயல் அங்கு தங்கியிருக்கும் பண்ணையாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும் இதன் மூலமாக ஒரு இனமுறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கரடியினாறு போலீசாருக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்கு பாதிக்கப்பட்ட கால்நடையின் பண்ணையாளர்கள் சென்றிருந்த போதும் முறைப்பாட்டினை ஏற்க மறுத்த கரடியினாறு காவல்துறை பொறுப்பதிகாரி பொய்யான தகவல்களை வழங்குவதாக கூறி இருக்கின்றார்.
பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் குறித்த காவல்துறையினரின் நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லப் போகின்றோம் என்ற காரணத்தினால் அவர்களது கால்நடை உயிரிழந்த சம்பந்தமான முறைப்பாட்டை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.