நுவரெலியாவில் சுற்றுலாப் படகு சேவையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
நுவரெலியா - கிரகரி ஏரியில் சுற்றுலாப் படகு சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர சபை மேயர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் நேற்று (19.04.2026) விபத்துக்குள்ளானதையடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நேற்றைய விபத்திற்குப் பிறகு, கிரகரி ஏரியில் உள்ள சுமார் 120 சுற்றுலாப் படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை வரவழைத்து பாதுகாப்பு நடடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
படகு சவாரி
இதன்போது, அனைத்துப் பயணிகளுக்கும் உயிர் காப்பு அங்கிகள் (Life Jackets) கட்டாயம் வழங்கப்பட வேண்டும், படகுகள் வேகம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் மற்றும் படகு சேவைகளை ஒழுக்கமான முறையில் முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இரு படகோட்டிகளுக்கும் எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |