இஸ்லாமிய உலகிற்கு ஒரு சமிக்ஞையை அனுப்பிய மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்
புதிய மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பும் விதமாக ஒரு படியை எடுத்துள்ளன என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துளார்.
துருக்கியின் சம்சுன் மாகாணத்தில் இளைஞர்களுடன் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய எர்டோகன் இதனை கூறியுள்ளார்.
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் நேர்மறையான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேர்மறையான முன்னேற்றங்கள்
சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அடியை எடுத்து வைத்துள்ளன. இந்த அடியின் மூலம், இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

“நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதில் நாம் வெற்றி பெறுவோம்” என எர்டோகன் விளக்கமளித்துள்ளார்.
பிரதிநிதித்துவமற்றது மற்றும் நியாயமற்றது என்று அவர் நீண்ட காலமாக விமர்சித்து வரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, உலகம் ஐந்தை விடப் பெரியது என்ற தனது நீண்டகாலக் கூற்று குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்திய அவர், ஒரு நியாயமான உலகத்திற்காக துருக்கி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 2 நிமிடங்கள் முன்