தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல் அறிகுறி! வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம
Sri Lanka
Colombo
Corona Virus
Corona Vaccine
By Vasanth
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிஷீல்ட் டொஸ் நேற்றைய தினம் ஏற்றப்படட்டுள்ள நிலையில். இது எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு சிறியளவிலான காய்ச்சல் நிலை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்றைய தினமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பொதுவாக நடக்கக்கூடிய ஒன்று. தடுப்பூசியால் இது நடக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி