சவால்களை எதிர்கொள்ளத் தேவையான உதவிகளை வழங்கத் தயார்! எதிர்க்கட்சித் தலைவரிடம் யுனிசெப்பின் பிரதி தலைமை உறுதி
இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்தின் பிரதி தலைமை அதிகாரி ஏமா ஃபிரஹாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடையே சந்திப்பு ஒகன்று இடம்பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
உலகம் முகம் கொடுக்கும் பாரிய சவாலான இந்த வைரஸ் பரவல் மற்றும் அதனால் பல்பக்க ரீதியாக எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் குறிப்பாக சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந் நாட்டு மக்களின் வாழ்கையைப் பாதுகாத்தல்,அதனை மேம்படுத்துவதற்காக யுனிசெப் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி கூறிய அவர்,இந்தப் பேரழிவிலிருந்து மீளுவதற்கு இலங்கைக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏமா ஃபிரஹாமியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கேரிக்கைகளை கவனத்திற் கொண்ட அவர், உயிர்களைக் காப்பாற்றவும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவத் தயாராக உள்ளதாகவும் ஊடகபபிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
