பிரான்ஸ் அதிபருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் இருதரப்புச் சந்திப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
Dubai
Emmanuel Macron
France
By Sathangani
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் மற்றும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு நேற்று (02) இடம்பெற்றது
டுபாயில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாடான COP28 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஜயம் மேற்கொண்ட போது இச்சந்திப்பு இடம்பெற்றது.
பசுமைப் பொருளாதாரம்
இதன்போது இலங்கையின் பசுமைப் பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்