இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியது என்ன..! செல்வம் எம்.பி வெளியிட்ட தகவல்

TNA Selvam Adaikkalanathan
By Vanan Aug 01, 2023 08:33 AM GMT
Report

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

13 ஆவது சட்டச் திருத்தத்தை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைகளுக்கான தோ்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

இதன் பின்னணியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வ கட்சிக் கூட்டம் இடம்பெற்ற போதிலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் அதில் எட்டப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தமிழ் கட்சிகள் வலியுறுத்திய போதிலும் அதிபர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், கலையரசன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது அதிகார பகிர்வு, உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பின் பின் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

 

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய தூதுவருக்கும் இடையில், எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இந்திய தூதுவரின் அழைப்பை ஏற்று நிகழும் இச்சந்திப்பில் த.மு.கூவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025