இணையவழி கலந்துரையாடலுக்கு அழைப்பு!
நூலக நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இணையவழிக் கலந்துரையாடலுக்கு ஆர்வமுள்ளவர்களை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நூலக நிறுவனத்தினரால் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இணைய வழி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஆய்வு வரிசை, ஆவண வரிசை, செயற்றிட்ட வரிசை, சேகர வரிசை ஆகிய தொனிப்பொருள்களில், தொனிப்பொருள்களில் இணையவழிக் கலந்துரையாடல்களை ஒழுங்கமைத்து வருகின்றது.
இந்த நிலையில், நூலக நிறுவனத்தின் இணையவழி நிகழ்ச்சித் தொடரில் 18 ஆவது கலந்துரையாடலாக "செய்னம்பு நாச்சியார் மான்மியமும் அதன் பண்பாட்டுப் பதிவுகளும்" எனும் தலைப்பிலான நூலகக் கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை 2021-10-02 இரவு 7.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் செ.யோகராசா வளவாளராகவும் நூலக நிறுவன ஆளுகைச் சபையின் சார்பில் முஹம்மட் சாக்கீர் ஒருங்கிணைப்பாளராகவும் பங்குகொள்கின்றனர்.
இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ளவர்களை இணைந்துகொள்ளுமாறு நூலக நிறுவனத்தினரும், ஏற்பாட்டுக்குழுவினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.