ஐ.நாவில் உரையாற்ற சென்ற ட்ரம்பிற்கு ஏற்பட்ட நிலை : வைரலாகும் காணொளி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் ஐநா சபையில் உரையாற்ற சென்ற போது நகரும் படிக்கட்டு(escalator) பழுதாகி நின்றதால் அவர்கள் இருவரும் நடந்து சென்றுள்ளனர்.
அத்துடன் ஐ.நா. சபையில் ட்ரம்ப் உரையாற்றும்போது அவர் முன் இருந்த 'டெலிபிராம்ப்ட்டர்' (உரையை பார்த்து வாசிக்க உதவும் கருவி) பழுதாகியதால் அவர் கடும் கோபம் அடைந்துள்ளார்.
வைரலாகும் காணொளி
இது தொடர்பான காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.
இதனால் அவர் ஐ.நா சபையை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.,து தொடர்பாக அவர் கூறுகையில், 7 போர்களை நிறுத்தினேன். ஒரு முறை கூட ஐ.நா, அழைப்பு எடுத்து பாராட்டவில்லை. அவர்கள் கொடுத்தவை எல்லாம், பாடாவதி எஸ்கலேட்டர், பழுதான டெலிபிராம்ப்ட்டர் மட்டுமே'' என்றார்.
வெள்ளை மாளிகை சீற்றம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறி உள்ளதாவது: இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு அப்பாவி தவறு அல்ல. 'இது பற்றி விசாரணை நடத்தி, ஐநாவில் யாரேனும் வேண்டுமென்றே எஸ்கலேட்டரை நிறுத்தி இருந்தால், அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
