அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்: வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா (Vavuniya) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (29) வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை வவுனியா பம்பைமடு பகுதியில் அஸ்வெசும திட்டத்திற்கான
பெயர் பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த பொதுமகன்
ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை
நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சமுர்த்தி அபிவிருத்தி
இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பை வழங்கு, அவர்கள் தங்கள் கடமைகளை
செய்ய விடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
