அமிர்தலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று காலை வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் இடம் பெற்றது.
சுடரேற்றி அஞ்சலி

இதன் போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
