படைவீரர்களுக்கு நன்றி செலுத்த முடியாத ஜனாதிபதி - கடும்தொனியில் சாடும் கம்மன்பில
நீர் வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்றை இழுத்து வருவது போன்றே ஜனாதிபதி மக்களினால் நிகழ்விற்கு அழைத்து வரப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றம் சுமத்தியுள்ளார்.
படை வீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஓர் போராட்டக் குழுவின் தலைவரே இன்று நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி வருகின்றார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சதி
எனவே ஜனாதிபதி அநுரவிற்கு படைவீரர்கனை நினைவுகூர்வது சிரமமானதாக இருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தவரே இந்த ஜனாதிபதி என அவர் குற்றம் சுமத்தியுள்ளர்.
அப்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு அநுர தரப்பினர் சூழ்ச்சி செய்தனர் எனவும் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர்
இன்றைய தினம் நடைபெறவுள்ள படைவீரர் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்க திட்டமிட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீர் வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்றை இழுத்து வருவது போன்றே ஜனாதிபதி மக்களினால் நிகழ்விற்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
படைவீரர்களுக்கு நன்றி செலுத்த முடியாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
