யாழில் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்திய நபருக்கு நேர்ந்த கதி
யாழில் (jaffna) தினமும் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபர் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கிழக்கு - அம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வீட்டிற்கு தினமும் மதுபோதையில் வரும் நபர் பெண் பிள்ளைகள் இருக்கும் அயல் வீட்டாரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தி வருகின்றார்.
பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை
மதுபோதையில் தினமும் அயல் வீட்டாரை அச்சுறுத்தி அநாகரிக செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர் ஈடுபடுவதால் உயிருக்கு பயந்து பாதிக்கப்பட்ட பெண் நடவடிக்கை எடுக்குமாறு மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடளித்தார்
இதனையடுத்து இன்று (17) சந்தேக நபர் மருதங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மருதங்கேணி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் - பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்