துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் பலி: மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம்
ஹம்பாந்தோட்டை (Hambantota) பகுதியில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (09) இரவு ஹம்பாந்தோட்டை - ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
இந்த நபர் ஹார்ட்வேயார் கடை ஒன்றை வியாபாரமாக நடத்தி வந்ததாகவும், நேற்று இரவு முதல் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் இன்னும் தெரியவரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹுங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்