ஜேவிபியில் இணைந்த முன்னாள் அதிகாரிகள்: ஆளும் கட்சியை கடுமையாக சாடல்
தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) காவல்துறை கூட்டமைப்பில் சேரவேண்டாம் என்று கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரட்ன (Ravi Seneviratne) குற்றஞ்சாட்டி உள்ளார்.
அத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தம்மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகரகமையில் (maharagam) இடம்பெற்ற காவல்துறை கூட்டமைப்பின் ஆரம்பக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் மற்றும் அநீதி
அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில், தனக்கு ஆளும் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் அழுத்தங்களை பிரயோகித்ததாக முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் மற்றும் அநீதியை எதிர்கொண்ட முன்னாள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநருக்கு நீதி வழங்கப்படும் என்றும் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,தேசிய மக்கள் சக்தியின் ஒய்வு பெற்ற பொலிஸ் கூட்டமைப்பில் முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரட்ன ( Ravi Seneviratne) மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர ( Shani Abeysekara) ஆகியோர் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |