திக் திக் நிமிடங்கள்..! பாரிய தொடருந்து விபத்தை தடுத்து நிறுத்திய நபர்
கடலோர தொடருந்து பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்து மொரட்டுவை பகுதியை சேர்ந்த ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மொரட்டுவை (Moratuwa) - மோதர பகுதியைச் சேர்ந்த சமந்த பெர்னாண்டோ என்பவரே விரைந்து செயற்பட்டு பாரிய விபத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
தனது உயிரைப் பணயம் வைத்து பேரழிவைத் தடுத்த சமந்த பெர்னாண்டோவின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் மக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தண்டவாளம் உடைந்து
அவர் கருத்து தெரிவிக்கையில், ”மகனின் வீட்டுக்கு அருகில் இருந்தேன். பெண்ணொருவர் தொடருந்து பாதையை அவதானித்துக் கொண்டிருந்தார்.

அவர் என்னை அழைத்து தண்டவாளம் உடைந்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் நான் அங்கு அருகே சென்று பார்த்தேன்.
அப்போது தொடருந்து ஒலி எழுப்பிக் கொண்டு வந்துக்கொண்டிருப்பதை அவதானித்தேன். உடனடியாக வீட்டுக்குச் சென்று ஆடையொன்றை எடுத்துக்கொண்டு, தொடருந்து வரும் போது தண்டவாளத்தின் நடுவே சென்று தொடருந்துக்கு ஆடையை காண்பித்து அசைத்துக் காட்டினேன்.
பின்னர் தொடருந்து நிறுத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரியிடம் தண்டவாளம் உடைந்துள்ளது என்றேன்.
பின்னர், தொடருந்து திணைக்கள அதிகாரிகள் அங்கு வந்து தண்டவாளத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்” என சமந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்