பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்
பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் குழந்தையின் தாயாருக்கு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது.
அதன்படி, 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான குறித்த பெண்ணுக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க (Navaratne Marasinghe) இன்று (05) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
6 மாதங்கள் சிறைத்தண்டனை
அத்துடன் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம், முழு மனித இனத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்றும் நீதிபதி குற்றம் சாட்டினார்.
குறித்த தாயார் செய்த செயல் கடுமையானது மற்றும் வருந்தத்தக்கது என்றும், இதுபோன்ற குற்றங்களை இலகுவாகக் கருத முடியாது என்றும், இதுபோன்ற குற்றங்களுக்கு மென்மையான தண்டனைகளை வழங்குவது சாத்தியமில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்