டொனால்ட் டிரம்ப் அதிபராக தகுதியற்றவர்: இந்திய வம்சாவளி அதிபர் வேட்பாளர் கண்டனம்
இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்பின் கீழ் ஐநா தூதராக பணியாற்றிய ஹேலி, டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மனதளவில் தகுதியற்றவர் என்று தனது பிரச்சார நடவடிக்கையின் போது குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், ஹேலி தனது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீதான விமர்சனம்
இந்த நிலையில், அதிபர் பொறுப்புக்கு உளவியல் ரீதியாக ட்ரம்ப் தகுதியற்றவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் வயதானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஜனவரி 6ம் திகதி நடந்த கலவரத்தை தடுக்க நிக்கி ஹேலி தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை பொதுக்கூட்டம் ஒன்றில் டொனால்டு ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.
அதற்கு பதிலளித்த நிக்கி ஹேலி, கலவரம் நடக்கும் போது எந்த பதவியிலும் இல்லாத நான் எவ்வாறு சட்டத்தை நிலைநாட்டுவது என்றார். 80 வயதான ஒருவரை நாம் அதிபராக தெரிவு செய்ய வேண்டுமா என்றும் நிக்கி ஹேலி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வம்சாவளி
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனான ட்ரம்பின் தொடர்பையும் நிக்கி ஹேலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் இந்திய வம்சாவளி என்று ட்ரம்ப் விமர்சித்ததையும் நிக்கி ஹேலி பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |