மேர்வின் சில்வாவிற்கு எதிராக பாய்ந்தது குற்றப்பத்திரிகை
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(mervyn silva) தொழிலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் ரூ. 153 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் நிதியை குவித்ததாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
லஞ்சம் சட்டத்தின் பிரிவு 23(1)(a) இன் கீழ், சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்களை ஈட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள்
குற்றப்பத்திரிகையில் சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக மூன்று முக்கிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் கூற்றுப்படி, கொழும்பு 7 பகுதியில் ரூ. 70 மில்லியன் மதிப்புள்ள நிலத்தை வாங்கியமை, கடவத்தையின் தலுபிட்டிய பகுதியில் ரூ. 30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்தை கையகப்படுத்தியமை மற்றும் அவரது மகன் மாலக சில்வாவுக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு ஜீப் வாங்கியது ஆகியவை தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
