மகசீன் சிறையில் மெக்ஸிகோ பலிகள்! சிக்கிய அதிகாரிகள்!
2005 இல் இதே நாளான ஏப்ரல் 28 ஆந்திகதி இரவு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்தில், உள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள சதுப்புநிலம் மறுநாள் உடலமாக மீட்கப்பட்ட ஊடகர் தராகி என அழைக்கப்படும் டி.சிவராமின் படுகொலைக்கும் சரி இலங்கையில் இதுவரையில் 35 தமிழ் ஊடகர்கள் உட்பட கொல்லப்பட்ட 45 ஊடகர்களின் படுகொலைகளுக்கு இந்த அரசாங்கத்திலும் நீதியின் சாயல் ஒரு முடிவு கூட கிட்டவில்லை.
எனினும் அமெரிக்காவைச் சேர்ந்த 12 வியட்நாமிய பூர்வீக பிக்குகள் அலோகா என்ற நாயுடன் மேற்கொண்ட சமாதான நடைப்பயணம் இன்று கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் முடிந்தபோது அரசதலைவர் அனுர குமார திசாநாயக்க அதற்கு தலைமையேற்ற உலகுக்கு சமாதானம் கூறியிருந்தார். ஆனால் உள்ளுர் சமாதானம் இன்னும் விடைதெரியாத வினாவாக இருக்கின்றது.
இதற்கிடையே சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மகசின் சிறையிலும் மெச்சிக்கோவின் போதைக்கடத்தல் மாபியா குழுக்கள் சிறைகளுக்குள் மோதுவது தப்பிக்க முயல்வது போன்ற பரபரப்பான சம்பங்கள் இடம்பெற்று அதில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |