சுற்றுலாத் துறையில் மைல்கல் : 2 மில்லியனை கடந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் (20 இலட்சம்) என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் இலண்டன் நகரிலிருந்து UL-504 என்ற இலக்க சிறிலங்கன் விமானத்தில் ஒரு பிரான்ஸ் தம்பதியினர் இன்று (17) பிற்பகல் 1.30 மணிக்கு இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
இந்த அடைவு, மீண்டு வரும் இலங்கைச் சுற்றுலாத் துறைக்கு மேலும் ஒரு நேர்மறையான படியைக் குறிப்பதுடன் இந்த ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி காணப்பட்டது.

இதற்கு மேம்பட்ட விமான இணைப்பு, ஊக்குவிப்புப் பிரசாரங்கள் மற்றும் இந்தியா, ஐக்கிய இராச்சியம், சீனா மற்றும் ஜேர்மனி போன்ற முக்கியச் சந்தைகளில் அதிகரித்து வரும் ஆர்வம் ஆகியன பங்களிப்பு செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை இன்னமும் இலங்கையின் முக்கிய வெளிநாட்டு நாணய வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக உள்ள நிலையில் உச்சக்கட்ட குளிர்காலப் பருவத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்