மியன்மாரில் இராணுவ ஆட்சி முடிவுக்கு ..! வெளியான அறிவிப்பு
மியன்மாரில் (Myanmar) 4 ஆண்டாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் (Min Aung Hlaing) செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தேர்தலில் மோசடி நடைபெற்றதால் தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
இராணுவ அவசர நிலை முடிவுக்கு
எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும்.
இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மியான்மரில் கடந்த 2020 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரிய வெற்றி பெற்ற நிலையில் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி 2021-ம் ஆண்டு அரசை கலைத்துவிட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
அவசர நிலையை அறிவித்து இராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
