காசாவில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளரை சாய்த்தது இஸ்ரேல்
இஸ்ரேலிய(israel) தாக்குதலில் தமது இராணுவ செய்தித் தொடர்பாளர் நஜி அபு சயீஃப் (அபு ஹம்சா)(Naji Abu Seif (Abu Hamza)) கொல்லப்பட்டதாக இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம்(Islamic Jihad Movement) அறிவித்துள்ளது.
தமது இராணுவ செய்தித் தொடர்பாளர் உயிரிழந்ததை இஸ்லாமிய ஜிகாத் இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை(18) அறிவித்தது.
இயக்கத்தின் இராணுவப் பிரிவான அல்-குட்ஸ் படைப்பிரிவின் (Saraya al-Quds) இராணுவ செய்தித் தொடர்பாளர் 'அபு ஹம்சா' என்ற புனைபெயரால் அறியப்படுகிறார்.
குற்றவாளி இராணுவத்தால் படுகொலை
அத்துடன் பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
BREAKING | Unconfirmed reports by Palestinian sources say that the military spokesman for the PIJ's Quds Brigades Naji Abu Seif, 'Abu Hamza', was assassinated by Israel during its renewed aggression on the Gaza Strip, alongside his family. pic.twitter.com/h7pXxvqetF
— The Palestine Chronicle (@PalestineChron) March 18, 2025
"குற்றவாளி இராணுவத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார், இது அவரது குடும்பத்தினரையும் அவரது சகோதரரின் குடும்பத்தினரையும் குறிவைத்தது" என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 530 ஆக அதிகரித்துள்ளது.இந்த தாக்குதல்களில் 80 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்