இலங்கைத் தீவில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றும் நிலை
இலங்கைத் தீவில் அரசாங்கம் அற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இராணுவம் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கூறிகிறார்.
இலங்கை தீவில் இராணுவம் மகா சங்கத்தைப் போல தீர்மானிக்கும் ஒரு சக்தியாக வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். யுத்த வெற்றிக்கு பின்னர் நாட்டில் இராணுவம் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
இந்தப் பின்னணிக்குள் இராணுவம் தலையிடக் கூடிய வாய்ப்பை தவிர்க்க வேண்டிய பொறுப்பு போராட்டக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு என அவர் கூறிகிறார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் பலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், முப்படைகளும், காவல்துறையும் இணைந்து கட்சிகளுக்கும் கட்சித் தலைமைகளுக்கும் ஆலோசனை சொல்லுகின்ற ஒரு சூழல் வந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு தன்மை எனக் கூறியுள்ளார்.
நாட்டின் சமகால அரசியல் நிலவரம், பொருளதார நெருக்கடி, போராட்டக் காரர்களின் மனோநிலை, ஆட்சிக் கவிழ்ப்பு எனப் பல விடயங்கள் குறித்து அவர் தெரிவிப்பவை காணொளி வடிவில்,