தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை ஐந்து ரூபாயால் குறைப்பு
இலங்கையில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாயினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலைகள்
இதேவேளை லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயாலும், 5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 42 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 20 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |