இன்று முதல் பால் தேநீரின் விலையில் மாற்றம்
இன்று (ஜனவரி 16) முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பால் மாவின் விலை
ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

உலக சந்தையில் பால்மா விலை குறைந்து வருவதால், அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோ பால் மாவின் விலை ரூ.125 குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 400 கிராம் பால் மாவின் விலை ரூ.50 குறைக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட பால் மா விலைகளுக்கு ஏற்ப, பால் தேநீரின் விலை குறைப்பு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |