போதைப்பொருளுடன் சிக்கிய தேரர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட தேரர்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சட்டத்தின் முன் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவார்கள் என்றும், எவருக்கும் அந்தஸ்து அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.
குறித்த சம்பவம் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சி
மேலும், மகா சங்கத்தினரின் ஆலோசனைகளை உள்வாங்கி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே கட்டுநாயக்கவில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலதிக உண்மைகள்
அதன்போது, அங்கு 110 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தேரர்கள் உட்பட பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், இது தொடர்பான மேலதிக உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்