கோட்டாபயவின் செயலணி தேவை இல்லை- கடுமையாக விமர்சிக்கும் இராஜாங்க அமைச்சர்
gotabaya
task force
Susil Premajayanth
By Jaso
ஒரே நாடு, ஒரே சட்டம் போன்ற செயலணி நாட்டுக்கு தேவையில்லை என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayanth) சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறானதொரு செயலணியை அமைப்பதில் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான சட்டம் நாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார். ஒரு நாடு ஒரே சட்டமாக இருக்க வேண்டுமானால் குற்றவாளிகளை நீதிமன்றத்தால் மன்னிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குறித்த செயலணி தொடர்பில் அரசியல் கட்சிகள்,மதத்தலைவர்கள் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.