சுதந்திர தினத்தில் முந்திரி பருப்பு உட்கொண்ட அமைச்சர் குழாம் : அம்பலப்படுத்திய எதிரணி எம்.பி
"சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட அரசாங்க அமைச்சர்கள் பொது நிதியை வீணடித்து முந்திரி பருப்பை சாப்பிட்டது பற்றி தான் இப்போது மக்கள் பேசுகின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake)இன்றையதினம்(06) நாடாளுமன்றில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுடன்(samantha vidyaratna) கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் நீங்கள் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். நான் பயப்படவில்லை" என்றும் குறிப்பிட்டார். இதன்போது இருவரும் மாறி,மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
பொது விவாதத்திற்கு வருமாறு சவால்
அத்துடன் தன்னுடன் பொது விவாதமொன்றுக்கு வருமாறு அமைச்சர் சமந்த வித்யாரத்னவிற்கு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி அண்மையில் காங்கேசன்துறைக்கு விஜயம் செய்ததாகவும், அங்கு மக்களிடம் தமிழில் "நல்லமா?" என்று கேட்டு அவர்களின் நலனைப் பற்றி விசாரித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
வடக்கு மக்களிடம் நலமா என எப்படி கேட்பார் அநுர..!
“அரிசி இல்லை, உப்பு இல்லை!” என்று முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கூறினார், அரசாங்கம் அரிசி, உப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறியபோது, வடக்கு மக்களிடம் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று ஜனாதிபதி எப்படிக் கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக வாக்குகளை இழக்க நேரிடும் என்று தசநாயக்க கூறினார். “ஒருவர் மக்களிடம் தேங்காய் சம்பல் அல்லது பால் சொதி உண்ண வேண்டாம் என்று கூறினார். அப்படியென்றால் அவர்கள் வேறு எதை உண்பார்கள்?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |