13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்
Colombo
Education
School
By Vasanth
தற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர், பெறுபேறுகளை எதிர்பார்த்து மாணவர்கள் பல மாதங்கள் காத்திருப்பதனை கருத்திற் கொண்டே, இந்த விடயம் தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்ன.
எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை, தரம் 10 ல் நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, தரம் 12ல் நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி