பாடசாலை முறைகேடுகள்: கல்வி அமைச்சர் பிறப்பித்த உத்தரவு
பாடசாலைகள் தொடர்பாக பெறப்படும் குற்றச்சாட்டுக்களை துல்லியமாகவும் திறமையாகவும் விசாரிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் குழு அறை இல. 01 இல் நேற்று (06) நடைபெற்ற கூட்டத்தில் எழுப்பப்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவுக்கு தேவையான அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பி அதனை வலுப்படுத்துமாறும், தற்போதுள்ள விசாரணைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
தவணையின் கல்வி நடவடிக்கைகள்
இதேவேளை, இந்த ஆண்டின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தெரிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்படும் மூன்றாம் தவணையின் கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
