ஆசிரியர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது - பிரதமர் ஹரிணி உறுதி
புதிய கல்வி சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளக்கூடிய முழுமையான அறிவைக் கொண்ட ஒரு பிள்ளையை உருவாக்குவதே புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையின் நோக்கம்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள்
பாரம்பரிய கல்வி முறைக்கு பதிலாக, மாணவர்களுக்கு அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்கி, அவர்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டும் வகையில் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் கூட சரியான புரிதல் இல்லை என கல்வித் தொழிற்துறையினர் சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
