புலம்பெயர் தமிழர்களுக்கு சிறிலங்கா நாடாளுமன்றில் புகழாரம் (காணொளி)
தமிழர் தாயகத்தில் முதலீடுகளை மேற்கொண்டு தமிழ மக்களுக்கு உதவிசெய்யும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் நிதிகுறித்து உண்மைக்கு மாறான பொய்ப் பரப்புரைகளை தென்பகுதி அரசியல்வாதிகள் மேற்கொள்ளக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (S.Sritharan) இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹார்ச டி சில்வா புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் நிதிகுறித்து முன்வைத்த தவறான கருத்துக்களுக்கு பதிலடி வழங்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் தமிழ் டயஸ்போரா என விளிக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள் ஒரு பலமான சக்தி என்பதால் அவர்களின் உதவி தமிழர் தாயகத்துக்கு மிக அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.