மஸ்கெலியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது நேற்றிரவு(26) மஸ்கெலியா காவல் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் மீட்கப்பட்டுள்ளது.
குமரி பிரிவில் சடலமொன்று காணப்படுவதாக அப்பகுதி மக்களால் மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்பு
கிடைக்க பெற்ற தொலைபேசி தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அந்த குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மனைவியால் புகார்
அத்துடன் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது மனைவி மஸ்கெலியா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திருந்திருந்தார்.
மேலும், ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் குறித்த சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |